search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. பெயர் அறிமுக தேதி மாற்றம்
    X

    மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. பெயர் அறிமுக தேதி மாற்றம்

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. பெயர் அறிமுக தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த விவரங்களை பார்ப்போம். #mahindra



    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் பெயர் நேற்று (டிசம்பர் 1) அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், புதிய காரின் பெயரை பின்னர் அறிவிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    “தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று நடைபெற இருந்த பெயர் அறிமுக விழா தள்ளிவைக்கப்படுகிறது. பெயர் அறிமுக விழாவிற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேதி தள்ளிவைக்கப்பட்டதால் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. எஸ்201 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் சங் யோங் டிவோலி காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா எஸ்201 மேட்டுப்பாளையம், உதகமண்டலம் போன்ற பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதேபோன்று லெ, லடாக் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளிலும் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. எஸ்201 கார் எக்ஸ்.யு.வி.300 என அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


    புகைப்படம் நன்றி: Motorbeam

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 சன்ரூஃப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லேம்ப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரேக் வின்ட்ஷீல்டு, எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப், பம்ப்பரின் இருமுனைகளிலும் ரிஃப்லெக்டர்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 மாடலின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த அம்சங்கள் பெரும்பாலும் சங் யோங் டிவோலி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்படலாம்.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்கியூ @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். #mahindra
    Next Story
    ×