search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அத்திக்கோம்பை கால்நடை, குதிரை கண்காட்சி களை இழந்தது
    X

    கால்நடைகளுக்கு தேவையான பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அத்திக்கோம்பை கால்நடை, குதிரை கண்காட்சி களை இழந்தது

    • அத்திக்கோம்பை உச்சி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் கால்நடை மற்றும் குதிரை கண்காட்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
    • விற்பனை இல்லாததன் காரணமாக நடைபெற்றுவரும் அத்திக்கோம்பை கால்நடை கண்காட்சி களை இழந்து காணப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை உச்சி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் கால்நடை மற்றும் குதிரை கண்காட்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

    126 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சிக்கு கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகள் மற்றும் குதிரைகளை விற்பனை செய்ய ஆண்டுதோறும் கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக கால்நடை கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 27-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் 2000-க்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் நிலையில் தற்போது 500-க்கும் குறைவான கால்நடைகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் வியாபாரிகள், விவசாயிகள் இந்த ஆண்டு கால்நடைகளை விற்பனை செய்ய அதிகம் முன்வராத காரணத்தினால் நடைபெற்றுவரும் கால்நடை சந்தை களையிழந்து காணப்படுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ரூ. 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான காளை மாடுகள் தற்போது ரூ.1 லட்சத்திற்கும், ்ரூ. 6 லட்சம் விலை போன குதிரைகள் தற்போது ரூ. 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் விலை போகிறது.

    அதேபோல நாட்டு மாடுகள் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது குறைந்து ரூ.60 ஆயிரம் மட்டுமே வியாபாரிகளால் கேட்கப்படுகிறது.கன்று குட்டிகள் ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.

    தற்போது குறைந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் கேட்கப்படுகிறது. மேலும் வியாபாரிகள் வரத்து குறைவு காரணமாகவும் விற்பனை இல்லாததன் காரணமாக நடைபெற்றுவரும் அத்திக்கோம்பை கால்நடை கண்காட்சி களை இழந்து காணப்படுகிறது.

    இனிவரும் நாட்களில் வெளியூர் வியாபாரிகள் வருகை தருவார்கள் என்ற நம்பிக்கையில் கால்நடைச்சந்தையில் மாடு மற்றும் குதிரைகளை விவசாயிகள் விற்பனைக்காக வைத்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, சலங்கை உள்ளிட்ட பொருட்களின் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×