search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லேறு பூட்டி பணிகளை தொடங்கிய 18 கிராம விவசாயிகள்
    X

    செல்லப்பன்பேட்டையில் நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நல்லேறு பூட்டி பணிகளை தொடங்கிய 18 கிராம விவசாயிகள்

    • தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.
    • இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை சம்பா தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெறவேண்டும்.

    வல்லம்:

    தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல்' என்று பெயர்.

    அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வீரமரசன்பேட்டையில் பொன்னேர் பூட்டும் திருவிழாவுக்காக விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு பூஜைகள் செய்துவிட்டு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக பூதலூர்- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் வீரமரச ன்பேட்டை நான்குவழி சந்திப்பு பகுதியில் உள்ள வயலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தினர்.

    பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர்.இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும்.

    மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். பின்னர் தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.

    அதே போல் சித்திரை பிறந்ததையொட்டி செல்லப்பன் பேட்டையில் விவசாயிகள் நல்லேறு பூட்டி இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை தொடங்கினர்.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் எல்லாம் சிறந்த தொழிலாக வேளாண்தொழில் விளங்குகிறது.

    தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் தங்க ஏர் பூட்டி உழுது விவசாய பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட ங்களில் ஆண்டுதோறும் சித்திரை தொடக்கத்தில் நல்லேறு பூட்டி விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம் தற்போது சித்திரை பிறந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை விவசாயிகள் நல்லேறு பூட்டி உழுது தொடங்கி உள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் செல்லப்பன் பேட்டையில் முன்னைய ம்பட்டி, ஆவாரம்பட்டி, புதுப்பட்டி, மனையடிப்பட்டி, செங்கிப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை பொன்னேர் பூட்டி கோவிலில் இருந்து பேரணியாக வந்து பொது நிலத்தில் ஒரே நாளில் கிராம மக்கள் ஒன்று திரண்டு தங்கள் கிராமங்களில் வயல்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடுகள் செய்து மாடுகளை ஏர்பூட்டி வயலில் உழுதனர்.

    பெண்கள் நெல்மணிகளை தூவினர்.

    இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை சம்பா தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெறவேண்டும்.

    இதேபோல் கரும்பு எள் வாழை பருத்தி கடலை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×