search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
    X

    2 காட்டுயானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றித்திரிவதை படத்தில் காணலாம்.

    2 காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்

    • மீண்டும் காட்டு யானைகள் பாலக்கோடு பகுதியில் சுற்றி வருவது விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்நிகழ்வாக ஒரு காட்டு யானை கம்பைநல்லூர் அருகே ஏரிக்கரையில் ஏறும் பொழுது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

    கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடுஅடுத்த வன பகுதியை ஒட்டி உள்ள கும்மனூர், சூடனூர், பஞ்சபள்ளி பகுதியில் சுற்றி வருகிறது.

    சூடனூர் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து நகர்வை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மீண்டும் காட்டு யானைகள் பாலக்கோடு பகுதியில் சுற்றி வருவது விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    Next Story
    ×