search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    2 பெண் ஊழியர்கள் தர்ணா
    X

    2 பெண் ஊழியர்கள் தர்ணா

    • கடந்த 4 ஆண்டுகளாக பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
    • அலுவலக வாசல் முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் 2பேருக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்களாக இருந்து வருபவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கோகிலா (42) மற்றும் மெகராஜ்( 45) ஆகிய இருவர் இந்த திட்டத்தின் கீழ் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து செயல் அலுவலர் கலா ராணியிடமும், பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி ஆகியோரிடம் பலமுறை தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி நேற்று 12 மணி அளவில் அலுவலக வாசல் முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தர்ணா போராட்டத்திற்கு பிறகு பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் இருவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இச்ச சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×