search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் சமேத பிரகன் நாயகி கோவிலில்   பிரதோஷ வழிபாட்டையொட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் சமேத பிரகன் நாயகி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், அரிசி மாவு, விபூதி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பனங்கூர் கிராமத்தில் உள்ள காளகஸ்தி சமேத நானாம்பிகை கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ஆண்டிமடம் அகத்தீஸ்வரர் கோவில்ஆண்டிமடம் விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோவில், ஆண்டிமடம் திருக்களத்தூர் திருக்கோடி வலத்தீஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாட்டில் ஆண்டிமடம், விளந்தை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மீன்சுருட்டி பிரகதீஸ்வரர் கோவில்மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

    விழாவையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தா.பழூர், காரைக்குறிச்சி, சிந்தாமணி, இடங்கண்ணி, தாதம் பேட்டை, கோடங்குடி, வாழைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெங்கனூர் ஈஸ்வரன் கோவில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்து உள்ள வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    விழாவையொட்டி விருத்தாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வெங்கனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.   குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொறுத்த அபராதரட்சகர் கோவில், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செட்டிகுளம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், குரூர், மாவலிங்கை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    Next Story
    ×