என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுக்கடலில் தத்தளித்த நாகூர் மீனவர்கள் மீட்பு
Byமாலை மலர்4 July 2016 11:17 AM IST (Updated: 4 July 2016 11:17 AM IST)
நடுக்கடலில் தத்தளித்த கொண்டிருந்த நாகூர் மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படை மீட்டனர்.
காரைக்கால்:
காரைக்கால் அடுத்துள்ள நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச்சேர்ந்த கோவிந்தராஜ் (வயது25), அருணாசலம் (35), கோபி (25), வெற்றி (20), தட்சிணா மூர்த்தி (45), பிரசாத் (20), ஜோதி (30), ரத்தினசாமி (45) மற்றும் ராகுல் (21) ஆகிய 9 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் காலை அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று படகு என்ஜின் பழுதடைந்தது. எவ்வளவோ முயன்றும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் தங்களது ஊர் பஞ்சாயத்தார்களுக்கு தகவல் தெரிவித்தனர். பஞ்சாயத்தார் காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான சி-415 ரோந்து கப்பல் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது, நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக நாகூர் மீனவர்களின் படகு காரைக்கால் கடற்பகுதியில் ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாகூர் மீனவர்களின் படகும், அதில் இருந்த 9 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். மீனவர்களிடம் இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டர் பட்நாயக் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் அனைவரும் நாகை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story
×