என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகராட்சி,பேரூராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது
Byமாலை மலர்29 Sept 2016 3:13 PM IST (Updated: 29 Sept 2016 3:13 PM IST)
நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய குழு அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு , தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 12 மாநகராட்சிகளில் போட்டியிடும் வார்டு வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். இந்த பட்டியலுடன் மாவட்ட ஊராட்சி குழு வார்டு வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இப்போது நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள் கொடுத்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் அ.தி.மு.க மேலிடம் இந்த பட்டியலை தயார் செய்துள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக தற்போது பட்டியல் சென்றுள்ளது. ஒப்புதல் வழங்கியதும் அனேகமாக இன்று மாலை நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய குழு அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story
×