என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்
Byமாலை மலர்8 Feb 2017 12:38 AM IST (Updated: 8 Feb 2017 12:38 AM IST)
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது. கட்சிக்கு எதிரான கருத்தை தெரிவித்ததால் இந்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் தமிழக அரசியல் சூழலில் மிகவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பசுமைவழிச்சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்திலும், போயஸ் கார்டனிலும் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
Next Story
×