என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலாப்பட்டு கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சி பணி: கவர்னர் ஆய்வு
Byமாலை மலர்2 Jun 2018 7:10 PM IST (Updated: 2 Jun 2018 7:10 PM IST)
காலாப்பட்டு கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.
சேதராப்பட்டு:
புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.80 கோடி செலவில் கடற்கரை மேலாண்மை திட்டத்தின் கீழ் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
அதுபோல காலாப்பட்டில் மத்திய அரசு மற்றும் புதுவை அரசு இணைந்து நடத்தும் அசோகா ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்கா, நடைபாதை மற்றும் சுற்றுலா பயணிகள் சூரிய குளியல் செய்ய வசதி மற்றும் யோகா மையம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி இன்று காலை 6.40 மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது நடைபெற்று வரும் பணிகள், மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
Next Story
×