search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி கைது
    X

    கேரளாவில் மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி கைது

    கேரளாவில் குடும்ப தகராறில் மனைவியை குத்திக்கொன்று விட்டு பீகாருக்கு தப்ப முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    கேரள மாநிலம் மலப்புரம் வெங்கரா பகுதி ஆசாத் நகரில் வசித்து வருபவர் நவ்சாத். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி கோதல் (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நவ்சாத் கத்தியால் மனைவி கோதலை குத்திக் கொன்றார். பின்னர் 2 குழந்தைகளுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நவ்சாத் சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பி செல்வது தெரிந்தது. இதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவில் இருந்து பீகாருக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். அதில் கொலையாளி நவ்சாத் தனது 2 குழந்தைகளுடன் பயணம் செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    காங்கேயத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்நாயக் (26), பிஜு ஹெம்ப்ரம் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 6.4.2018 அன்று ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் நாயக் தலையில் கல்லை போட்டு பிஜு ஹெம்ப்ரம் கொலை செய்தார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒடிசா செல்லும் ரெயிலில் கழிவறையில் பதுங்கி இருந்த பிஜு ஹெம்ப்ரப்பை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×