search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நர்சுகள் இடமாற்றத்திற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு- சட்டசபையில் அமைச்சர் தகவல்
    X

    நர்சுகள் இடமாற்றத்திற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு- சட்டசபையில் அமைச்சர் தகவல்

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகள் இடமாற்றத்திற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய தி.மு.க. உறுப்பினர் மாசிலாமணி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். தற்போது 10 ஆயிரம் பேருக்கு 8 டாக்டர்கள் என்ற நிலையில் தமிழ்நாட்டில் டாக்டர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரம் பேருக்கு 18 டாக்டர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். இதேபோல் நர்சுகளும் தேவைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் 9533 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு சம்பளத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரம் ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களுக்கு விருது வழங்குவது நாட்டிலே இந்த அரசுதான். செவிலியர்கள் இடமாறுதலுக்காக ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை கலந்தாய்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம் இடமாறுவதற்கான கவுன்சிலிங் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TN Assembly
    Next Story
    ×