search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச் சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் 25-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    8 வழிச் சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் 25-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலையில் 25-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.#ChennaiSalemGreenExpressWay
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை” அமைக்கும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    இந்த பசுமை விரைவு சாலை திட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், விளை நிலங்கள், பசுமையான மலைகள், நீர் ஆதாரங்கள் போன்றவற்றிற்கு ஏற்படும் கடும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வகையிலும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழகத்தின் சார்பில் இன்றைய தினம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.

    ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., தலைமையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவானாந்தம் முன்னிலையில் வருகின்ற 25-ந் தேதி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiSalemGreenExpressWay
    Next Story
    ×