search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    62 வருவாய் கிராமங்கள் இணைப்பு - சென்னை விரிவாக்கப்பணி அடுத்த மாதம் தொடக்கம்
    X

    62 வருவாய் கிராமங்கள் இணைப்பு - சென்னை விரிவாக்கப்பணி அடுத்த மாதம் தொடக்கம்

    62 வருவாய் கிராமங்களை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதால் எல்லை வரையறை மறு சீரமைப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன.
    சென்னை:

    தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மாவட்டம் மற்றும் சென்னை மாநகர எல்லையை விரிவாக்கம் செய்து அறிவித்தது.

    இதேபோல் சென்னை மாநகராட்சி என்று இருந்ததை பெருநகர மாநகராட்சியாக (கிரேட்டர் சென்னை) அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மாவட்டம் மற்றும் சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சென்னையையொட்டி உள்ள திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டப் பகுதிகள் சென்னை மாவட்டத்துடனும், சென்னை மாநகர எல்லையுடனும் இணைக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமங்களுடன் புதிதாக வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுகாக்களில் சில வருவாய் கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் தாலுகாக்களில் சில வருவாய் கிராமங்களும் என மொத்தம் 62 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுகின்றன, இதன்மூலம் சென்னை மாவட்டத்தில் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை மாவட்டத்தில் எல்லை வரையறை மறு சீரமைப்பு பணிகள் வருகிற ஜூலை மாதம் முறைப்படி தொடங்குகின்றன. இதற்கான பணிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

    எல்லை விரிவாக்கத்தின் மூலம் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லை 15 மண்டலங்களை உள்ளடக்கி 176 சதுர கி.மீ.-ல் இருந்து 426 சதுர கி.மீ. ஆக விரிவடைகிறது. கூடுதலாக 2 வருவாய் மண்டல அதிகாரிகள் இடம் பெறுகிறார்கள்.
    Next Story
    ×