search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டியில் மருந்து கடை அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஆண்டிப்பட்டியில் மருந்து கடை அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஆண்டிப்பட்டியில் மருந்து கடை அதிபர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 45). ஆண்டிப்பட்டியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பெங்களூருவில் உறவினர் வீட்டு விசே‌ஷத்துக்காக கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார். இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி வந்த பரணிதரன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விரைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சுமார் 1 கி.மீ தூரம் ஓடி நின்றது. மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர் வீட்டுக்குள் சென்றது பதிவாகியுள்ளது. அதை வைத்தும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது புறநகர் பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    ஆனால் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடவில்லை. இதனால் ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×