என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அமித்ஷா 9-ந்தேதி சென்னை வருகை
சென்னை:
அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ஏற்கனவே 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது. இப்போது வருகிற 9-ந்தேதி (திங்கள்) தமிழகம் வருகிறார். 8-ந்தேதி இரவே சென்னைக்கு வந்து தங்குகிறார். 9-ந்தேதி காலை 8 மணி முதல் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது.
கட்சியின் உயர்மட்டக்குழு நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற குழுக்களின் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளை சென்னையில் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்து இரவில் சென்னையில் தங்குகிறார். மறுநாள் (10-ந்தேதி) டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அதிக அளவில் நிர்வாகிகள் பங்கேற்பதால் கூட்டம் நடத்துவதற்கான இடங்களை பா.ஜனதா தலைவர்கள் தேர்வு செய்து வருகிறார்கள். #AmitShah #bjp