search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- டியூசன் சென்டர் உரிமையாளர் கைது
    X

    4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- டியூசன் சென்டர் உரிமையாளர் கைது

    விழுப்புரம் அருகே 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டியூசன் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 32). எம்.எஸ்.சி.பட்டதாரி. திருமணமாகவில்லை. இவர் தனது வீட்டு மாடியில் மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார்.

    இவருக்கும் தெளி கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி மல்லிகா(31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் மல்லிகாவை அவரது கணவர் அந்தோணிராஜ் பலமுறை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் மல்லிகா தனது 4 வயது மகளை அழைத்து கொண்டு வளவனூரில் உள்ள கள்ளகாதலன் தணிகை வேல் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு தணிகைவேல் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த கள்ளகாதலியின் 4 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை பார்த்த தாய் மல்லிகா அதனை தடுக்கவில்லை. காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் தணிகைவேல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து விழுப்புரம் சைல்டுலைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சைல்டுலைன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து சைல்டுலைன் அதிகாரிகள் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தணிகைவேல் மற்றும் மல்லிகா ஆகிய 2 பேர் மீது இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். இந்த நிலையில் வளவனூர்-திருவந்தாடு ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் தணிகைவேல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணி தலைமையிலான போலீசார் அந்த முட்புதருக்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த தணிகை வேலை பிடிக்க முயன்றனர். அப்போது தணிகைவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியனை கொலை செய்ய முயன்றார். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்து தப்பி செல்ல முயன்றார்.

    ஆனால் தணிகைவேலை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் தணிகைவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மல்லிகாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×