search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.8½ லட்சம் மோசடி
    X

    தேனி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.8½ லட்சம் மோசடி

    தேனி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.8½ லட்சம் மோசடி

    தேனி:

    தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அழகுராஜ் மகன் அருண்குமார். இவருக்கு அரசு கால்நடைத்துறையில் வேலை வாங்கித் தருவதாக சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறியுள்ளார். அதற்காக அழகுராஜிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8½ லட்சம் பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை.

    தன்னை ஏமாற்றுவதை அறிந்த அழகுராஜா இது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவாரம் போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி பணம் மோசடியில் ஈடுபட்ட முருகன் மீது தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் போடி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த காந்திராஜன் மனைவி சித்ரா. கணவர் இறந்து விட்டதால் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவரிடம் போடி பாலாஜி நகரைச் சேர்ந்த கபில்ராஜா. கடந்த வருடம் அறிமுகமானார். தனக்கு மூணாறில் 54 ஏக்கரில் ஏலத் தோட்டம் இருப்பதாகவும், அல்புகாரியில் ரிசார்ட் இருப்பதாகவும் கூறினார்.

    மேலும் மாட்டுப்பட்டி செல்லும் பாதையில் புதிய ரிசார்ட் கட்டி வருவதாகவும் அதற்காக வங்கியில் கேட்ட கடன் தொகை தாமதம் ஆவதால் ரூ.30 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு ஈடாக அந்த ரிசார்ட்டில் சித்ராவையும் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக உறுதிமொழி பத்திரம் அளித்தார். அதன்படி கடந்த வருடம் ஜூலை மாதம் ரூ.30 லட்சம் பணத்தை சித்ரா கொடுத்தார். ஆனால் சொன்னபடி ரிசார்ட்டில் சித்ராவை பங்குதாரராக சேர்க்கவில்லை. தான் கொடுத்த பணத்தை சித்ரா கேட்ட போது அவர் மீது கந்து வட்டி புகார் கொடுத்து விடுவதாக கபில்ராஜா மிரட்டியுள்ளார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் சித்ரா புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கபில்ராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×