search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருத்துறைப்பூண்டியில் அடகு கடைக்காரரிடம் 20 பவுன் நகை- ரூ.1¾ லட்சம் அபேஸ்
    X

    திருத்துறைப்பூண்டியில் அடகு கடைக்காரரிடம் 20 பவுன் நகை- ரூ.1¾ லட்சம் அபேஸ்

    திருத்துறைப்பூண்டியில் அடகு கடைக்காரரிடம் 20 பவுன் நகை மற்றும் ரூ.1¾ லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் களப்பாளில் அடகு கடை நடத்தி வருகிறார்.

    ராஜேந்திரன் தன்னுடைய அடகு கடையில் அடகு பிடிக்கப்படும் நகைகளை திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் வைத்துவிட்டு பணம் எடுத்து செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று ராஜேந்திரன் வங்கியில் இருந்து 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு டி.மு. கோர்ட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    இதை கவனித்து வந்த மர்ம நபர்கள் பெட்டியின் பூட்டை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தையும், 20 பவுன் நகையையும் திருடி சென்று விட்டனர். சாப்பிட்டுவிட்டு வந்த ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே பார்த்தபோது பணம், நகை திருட்டு போய்இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×