search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலைநகர் மந்தைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, தச்சுதொழிலாளி. இவரது மனைவி நந்தினி (வயது24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் நந்தினிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வப்போது வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நந்தினி கடும் வயிற்று வலியால் துடித்தார். இதனால் மனமுடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை சுந்தரமூர்த்தி தச்சு வேலைக்கு சென்ற பின்னர் மூத்தமகனை பள்ளிக்கு அனுப்பினார். இளைய மகனை அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு வீட்டுக்கு வந்து நந்தினி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் முத்தியால்பேட்டை கணேஷ்நகர் பாப்பம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகன் ரமேஷ் (வயது30), பெயிண்டர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ரமேஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் கூலிவேலை செய்து வரும் மல்லிகாவிடம் பணம் வாங்கி மதுகுடிப்பது வழக்கம்.

    அதுபோல நேற்று காலை ரமேஷ் வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்க மல்லிகாவிடம் பணம் கேட்டார். ஆனால் மல்லிகா பணம் கொடுக்க மறுத்து வேலைக்கு சென்று விட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த ரமேஷ் வீட்டில் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×