search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மருத்துவமனை கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு
    X

    சென்னை மருத்துவமனை கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

    சென்னை அருகே மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். #hospitalbuildingcollapses
    சென்னை:

    சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட்டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.



    நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச் சுவர் மீது விழுந்தது. மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன. பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது. மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த பீகாரை சேர்ந்த ராஜன் சவுத்ரி(30) என்ற தொழிலாளி இன்று உயிரிழந்தார்.

    கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ஜினீயர்கள் 2 பேரை  கைது செய்தனர். #hospitalbuildingcollapses

    Next Story
    ×