search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரபுநாடுகளை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு பொதுஇடத்தில் தண்டனை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    X

    அரபுநாடுகளை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு பொதுஇடத்தில் தண்டனை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளை போன்று பொது இடத்தில் வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளது. #GKVasan
    சென்னை:

    மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதில் மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டத்தின் விதிமுறைகளை உடனடியாக அமுல்படுத்தும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாற்றுத்தினாளிகள் மட்டுமல்லாது பொதுவாகவே பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அரபு நாடுகளில் இருப்பதுபோல் பொதுமக்கள், குற்றவாளியின் உறவினர்கள் மத்தியில் பொது இடத்தில் வைத்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி என்று தெரிந்ததும் காலம் கடத்தாமல் உடனடியாக தூக்குதண்டனை கொடுக்கும் அளவுக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.



    காவல்துறையினர் பாலியல் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும்போது அவர்களது முகத்தை மூடக்கூடாது. இதுபோன்று இழி செயலில் ஈடுபடுவோர் முகம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். மக்கள் முன்னிலையில் அவர்கள் அவமானப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க தலைவலி லலிதாம்பிகை, செயலாளர் மகேஸ்வரி, த.மா.கா. நிர்வாகிகள் ஞானதேசிகன், சக்திவடிவேல், முனவர் பாஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், அனுராதா அபி, அண்ணாநகர் ராம்குமார், சைதை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GKVasan
    Next Story
    ×