search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனப்பகுதியில் கன மழை - மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
    X

    வனப்பகுதியில் கன மழை - மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

    ஆண்டிப்பட்டிஅருகே மேகமலை வனப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில் அமைந்துள்ளது மேகமலை அருவி. வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதமாக மழை இல்லாத காரணத்தால் மேகமலை அருவி வறண்டு காணப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்கள் மட்டுமின்றி தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவிக்கு வருகின்றனர். இப்பகுதியை தமிழக அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேகமலை கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலம் பயன்பெறும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என்றும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×