search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க கட்டி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: சேலம் வாலிபரை ஏமாற்றிய 3 பெண்கள்
    X

    தங்க கட்டி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: சேலம் வாலிபரை ஏமாற்றிய 3 பெண்கள்

    தருமபுரி அருகே குறைந்த விலைக்கு தங்க கட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பெண்கள் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    தருமபுரி:

    சேலம் அஸ்தம்பட்டி, பந்தல் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால மணிகண்டன் (வயது 36) நகை வியாபாரி.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர் பால மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டு தங்களிடம் ஒரு கிலோ தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை குறைந்த விலைக்கு கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி உள்ளனர். அதனை நம்பிய பாலமணிகண்டனிடம், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தைமேடு பகுதிக்கு பணத்துடன் வந்து நகையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார்.

    அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நல்லம்பள்ளி வந்த பாலமணிகண்டன் ரூ.10 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்து விட்டு தங்க கட்டிகளை வாங்கி சென்றார்.

    வீட்டிற்கு சென்றதும் தங்ககட்டிகளை உரசி பார்த்த போது, அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமணிகண்டன் அதியமான் கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்து கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த சரத்குமார் (32) என்பவரை கைது செய்தனர்.

    இந்த தங்க கட்டிகளை 2 பெண்கள் தான் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பெயர் தாத்திரி (60), நேனா (30) என்பது தெரியவந்தது இவர்களுக்கு மூளையாக கீதா என்ற பெண் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவருமே கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த பெண்கள் வாலிபர் சரத்குமாருடன் தமிழ்நாடு முழுவதும் காரில் சென்று நகை வியாபாரிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. பெண்கள் என்பதால் பலர் புகார் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இது குறித்து குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×