search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு எப்படி, என்ன சிகிச்சை நடக்கிறது?
    X

    கருணாநிதிக்கு எப்படி, என்ன சிகிச்சை நடக்கிறது?

    காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கருணாநிதியை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கருணாநிதியை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    கருணாநிதியின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சீராக இயங்குகின்றன. ஆனாலும் சுயநினைவு இல்லாத நிலையே தொடர்கிறது.

    சிறுநீரக நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. அதற்காக நோய் எதிர்ப்பு மருந்துகள் சிரை வழியாக செலுத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரத்த அழுத்தம் குறைந்து கவலைக்கிடமான நிலை ஏற்பட்டது. அதற்கான மருந்து செலுத்தப்பட்டு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    கருணாநிதியின் ரத்தத்தில் கடுமையான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சிறுநீரக நோய் தொற்று, நிமோனியா காய்ச்சல், வயிற்றுப்பகுதியில் நோய் தொற்று காரணமாக ரத்தத்தில் நோய் தொற்று உருவாகும்.

    நோய் தொற்றை எதிர்ப்பதற்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடிய வேதிப்பொருட்கள் முயற்சி செய்யும். அப்போது இந்த வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலப்பதால் கடுமையான நோய் தொற்று ஏற்படுகிறது.

    ரத்தத்தில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக சுயநினைவு இல்லாத நிலை, ரத்த அழுத்தம் குறைதல், மூச்சு விடுவதில் சிரமம், தோலின் நிறம் மாறுதல், ரத்த அணுக்களின் (பிளேட் லெட்டுகள்) எண்ணிக்கை குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

    முதுமை காரணமாக இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளுக்காக சிரை வழியாக செலுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக செயல்பட்டது.

    ஏனெனில் முதுமை காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.

    இந்த பாதிப்புகளை 24 மணி நேரமும் கண்காணித்து சிரைவழியே மருந்துகளை செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    Next Story
    ×