search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காஞ்சீபுரத்தில் நூதனமுறையில் மணல் திருடும் பெண்கள்- கலெக்டர் வேதனை
    X

    காஞ்சீபுரத்தில் நூதனமுறையில் மணல் திருடும் பெண்கள்- கலெக்டர் வேதனை

    காஞ்சீபுரத்தில் நூதன முறையில் பெண்கள் மணல் திருட்டில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கலெக்டர் கூறி்யுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு உள்ளிட்ட ஆற்றுபடுகைகளில் லாரிகள், மாட்டுவண்டிகள், டிராக்டர்கள் ஆகியவைகள் மூலம் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின் பேரில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போலீசாரின் கடும் நடவடிக்கையால் மணல் திருட்டு பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டது என்றாலும் கோணிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் சிலர் மணல் திருடி விற்று வருகின்றனர். இது காவல் துறையினருக்கு சவாலாக உள்ளது.

    இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆறு, ஏரிகளில் மணல் திருட்டை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று கேட்டுக் கொண்டனர்.

    இருசக்கர வாகனங்கள் மூலம் செய்யப்படும் மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டது. என்றாலும், தற்போது பெண்கள் கூடையில் மணலை திருடி மேற்பகுதியில் காய்கறிகளை வைத்து கொண்டு மணல் திருடி செல்கின்றனர்.

    இது போன்று செல்பவர்கள் அனைவரையும் சோதனையிடுவது சாத்தியமில்லை. பெண்களே மணல் திருட்டில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே இது போன்று மணல் திருட்டில் பெண்கள் ஈடுபடவோ, ஈடுபடுத்தப்படவோ கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    Next Story
    ×