search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை
    X

    ஒட்டன்சத்திரத்தில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை

    அரசு நிர்ணயம் செய்த விற்பனை நேரத்தினையும் மீறி ஒட்டன்சத்திரத்தில் 24 மணி நேரமும் படுஜோராக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    ஒட்டன்சத்திரம்:


    ஒட்டன்சத்திரம் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புற்றீசல் போல் பரவிய முறைகேடாக 24 மணி நேரமும் அரசு மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனையால் ஆங்காங்கே குடிமகன்கள் அரைகுறை ஆடைகளுடன் அநாகரீகமான முறையில் சாலைகளில் வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் மாநகராட்சி கழிவறை அருகில் அதாவது லட்சுமி திருமண மகால் அருகில் ஏ.கே.எம். சி காம்ப்ளக்ஸ் எதிரில் இந்தியன் தியேட்டர் அருகில் உள்ள சந்திலும், அத்தி கோம்பை ஊராட்சி மன்ற அலுவலகம், ரேசன் கடை அருகில் உள்ள பெட்டிக் கடையிலும், சத்திரப்பட்டி பெட்ரோல் பங்கிலும், வடகாடு ஊராட்சியிலும் புதுச்சத்திரத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் 2 வீட்டிலும், மூலச்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கடாசலம் வீட்டின் அருகிலும் தனிநபர் வீட்டிலும் மது விற்கப்படுகிறது.

    இதுதவிர கவுண்டன் புதூர், பி.அம்மாபட்டி கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் மதுபான ஒரு குவாட்டர் நிர்ணய விலை ரூ.100-க்கு கூடுதலாக 140 குவாட்டர் விற்கப்பட்டு வருகிறது.

    அரசு நிர்ணயம் செய்த விற்பனை நேரத்தினையும் மீறி 24 மணி நேரமும் படுஜோராக மதுபானங்கள் விற்கபட்டு வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×