search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிஐடி காலனியில் திமுக தொண்டர்கள் தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் லேசான தடியடி
    X

    சிஐடி காலனியில் திமுக தொண்டர்கள் தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் லேசான தடியடி

    சிஐடி காலனியில் திமுக தொண்டர்கள் தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர்.

    இந்நிலையில், சிஐடி காலனியில் உள்ள வீட்டில் கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது வீட்டுக்கு  வெளியே காத்திருந்த தொண்டர்கள், அங்கு பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேற  முயன்றனர்.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.  #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    Next Story
    ×