search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினத்தன்று 449 கோவில்களில் சமபந்தி விருந்து - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    சுதந்திர தினத்தன்று 449 கோவில்களில் சமபந்தி விருந்து - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 449 கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது. கே.கே.நகர் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். #Independenceday
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆகஸ்ட் 15 ஆம் நாள் 449 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன.



    சென்னை பெரு நகரப் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் விவரம் வருமாறு:-

    1. தியாகராஜசுவாமி கோயில், திருவொற்றியூர்-சபாநாயகர் தனபால்.

    2. சக்தி விநாயகர் கோயில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர்- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    3. மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர்-துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.

    4. பார்த்தசாரதி சுவாமி கோயில், திருவல்லிக்கேணி- திண்டுக்கல் சீனிவாசன்.

    5. அனந்தபத்மநாப சுவாமி கோயில், அடையாறு- செங்கோட்டையன்.

    6. முண்டகக்கண்ணியம் மன் கோயில், மயிலாப்பூர்- செல்லூர் ராஜூ.

    7. காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் கோயில், தம்புசெட்டித் தெரு-தங்கமணி.

    8. கபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர்-எஸ்.பி.வேலு மணி.

    9. சுந்தரேஸ்வரர் கோயில், ராயப்பேட்டை- ஜெயக்குமார்.

    10. பாம்பன் சுவாமி கோயில், திருவான்மியூர்- சி.வி.சண்முகம்.

    11. ஏகாம்பரேசுவரர் கோயில், தங்கசாலைத் தெரு-அன்பழகன்.

    12. தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி-சரோஜா.

    13. மாதவப் பெருமாள் கோயில் மயிலாப்பூர்- எம்.சி.சம்பத்.

    14. சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில், வில்லி வாக்கம்- கருப்பண்ணன்.

    15. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை- காமராஜ்.

    16. மகாலட்சுமி கோயில், பெசன்ட் நகர்-ஓ.எஸ்.மணியன்.

    17. பாதாளபொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம்- ராதாகிருஷ்ணன்.

    18. முத்துக்குமாரசுவாமி கோயில், பூங்கா நகர்- விஜயபாஸ்கர்.

    19. ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில், சிந்தாதரிப் பேட்டை- துரைக்கண்ணு.

    20. கச்சாலீசுவரர் கோயில், அரண்மனைக்காரன் தெரு, சென்னை- கடம்பூர் ராஜூ .

    21. வடபழநி ஆண்டவர் கோயில், வடபழநி- ஆர்.பி.உதயகுமார் .

    22. அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், நுங்கம்பாக்கம்-நடராஜன்.

    23. சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோயில், தேவ ராஜ முதலி தெரு- வீரமணி.

    25. தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு- ராஜேந்திர பாலாஜி.

    26. செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் மேற்கு தாம்பரம்- பெஞ்சமின்.

    27. அறுபடை முருகன் கோயில், பெசன்ட் நகர்- மணிகண்டன்.

    28. காரணீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை- ராஜலட்சுமி.

    29. திருவல்லீஸ்வரர் கோயில் பாடி-பாண்டிய ராஜன்.

    30. கங்காதீஸ்வரர் கோயில், புரசைவாக்கம்-பாஸ்கரன்.

    31. காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு- சேவூர் ராமசந்திரன்.

    32. அருணாச்சலேசுவரர் கோயில், பள்ளியப்பன் தெரு-எஸ்.வளர்மதி.

    33. ஏகாம்பரேஸ்வரர் கோயில், அமைந்தகரை- பாலகிருஷ்ணா ரெட்டி.

    34. பரசுராம லிங்கேஸ்வரர் கோயில், அயன்புரம்- ஜெயராமன்.

    35. திருவட்டீஸ்வரர் கோயில் திருவட்டீஸ்வரன் பேட்டை-அரசு தலைமை கொறடா ராஜேந்திரன். #Independenceday

    Next Story
    ×