என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா- நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்
Byமாலை மலர்15 Aug 2018 8:45 PM IST (Updated: 15 Aug 2018 8:45 PM IST)
புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். #IndependenceDayIndia #narayanasamy
புதுச்சேரி:
நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டது. புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் இன்று நடந்தது. விழாவையொட்டி உப்பளம் மைதானம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு மேடையும், கொடிக்கம்பமும் அமைத்திருந்தனர்.
சரியாக காலை 8.58 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்தார். அவரை தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் வரவேற்று அழைத்து வந்தார். நேராக மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மீண்டும் மேடைக்கு திரும்பிய அவர் சுதந்திர தின உரையாற்றினார்.
இதையடுத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதை நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச் சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, சிவா, நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, முன்னாள் எம்.பி. ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். #IndependenceDayIndia #narayanasamy
Next Story
×