search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 500 டீலக்ஸ் பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றம்
    X

    சென்னையில் 500 டீலக்ஸ் பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றம்

    சொகுசு கட்டண பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு குறைந்து உள்ளதால் 500 டீலக்ஸ் பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக இயக்கப்படுகிறது. #Deluxebus

    சென்னை:

    அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்குவதால் கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது.

    இதன்படி சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.5, அதிக பட்சமாக ரூ.23 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

    விரைவு பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ7, அதிக பட்சமாக ரூ.35, சொகுசுப் பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.12 அதிக பட்சமாக ரூ.48 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

    கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் பலர் மின்சார ரெயில், ஷேர் ஆட்டோக்கள், கால்டாக்சி என மாற்று போக்குவரத்தை நாடிச்சென்றனர்.

    இதனால் மாநகர பஸ்களில் கூட்டம் குறைந்தது பயணிகள் அதிகம் பயணிக்காததால் பல்வேறு வழித் தடங்களில் காலியாகவே பஸ்கள் சென்று வந்தன. எதிர் பார்த்த வருமானம் போக்கு வரத்து கழகத்துக்கு கிடைக்க வில்லை.


    இதனால் பயணிகளை மீண்டும், மாநகர பஸ்களுக்கு ஈர்க்கும் வகையில் சாதாரண கட்டண பஸ்களை அதிக அளவில் இயக்கி வருகிறார்கள்.

    இது பற்றி போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் 1250-க்கும் மேற்பட்ட பஸ்கள் இப்போது சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகிறது. சொகுசுப் பஸ்கள் காலியாக சென்று வருவதால் அந்த பஸ்களை சாதாரண பஸ்களாக மாற்றி வருகிறோம்.

    அந்த வகையில் 500 டீலக்ஸ் பஸ்களை சாதாரண பஸ்களாக மாற்றி உள்ளோம். அதில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 என்று எழுதி வைத்துள்ளோம். இதனால் பயணிகள் மாநகர பஸ்களில் மீண்டும் அதிக அளவில் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×