search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாய்களை தூர்வார அரசு ஒதுக்கிய ரூ.400 கோடி எங்கே? - தினகரன் கேள்வி
    X

    கால்வாய்களை தூர்வார அரசு ஒதுக்கிய ரூ.400 கோடி எங்கே? - தினகரன் கேள்வி

    கால்வாய்களை தூர்வார அரசு ஒதுக்கிய ரூ.400 கோடி எங்கே? என டிடி.வி.தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDinakaran #ADMK

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மதிப்பில்லை. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை அதிரடியாக கைது செய்கிறார்கள். இது இடிஅமீன் ஆட்சி. அராஜக சுயநல ஆட்சி. ஜனநாயகம் என்ற பெயரில் அடிமைகள் ஆட்சி நடக்கிறது.

    காவிரியில் வெளியேறும் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. டெல்டா பகுதிகளில் கால்வாய்களையும், நீர்நிலைகளையும் தூர் வாருவதற்காக ரூ.400 கோடி ஓதுக்கப்பட்டு இருந்தது. அது எங்கே போனது?

    கடைமடை பகுதிக்கு இதுவரை காவிரி நீர் செல்லவில்லை. முறையாக தூர்வாரி இருந்தால் டெல்டா பகுதி முழுமையாக காவிரி தண்ணீர் கிடைத்து இருக்கும். ஆனால் இப்போது விவசாயிகள் போராடும் நிலை உருவாகி இருக்கிறது. நாங்களும் போராடுவோம்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து இயற்கையே பயப்படுகிறது என்று அமைச்சர் ஒருவர் கூறி இருக்கிறார். அம்மாவை விட எடப்பாடியார் பெரிய ஆள் என்று கூறி வருகிறார்கள். இந்த ஆட்சி நீதிமன்றத்தின் கருணையால் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    எங்கள் கட்சியில் தொண்டர்கள் மோதிக் கொண்டது பற்றி பெரிதாக பேசுகிறார்கள். இது உள்கட்சி பிரச்சினை. சகோதரர்கள் சண்டை. விரைவில் சரியாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #ADMK

    Next Story
    ×