search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி
    X

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி

    வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இருந்து பேசுவதாக கூறி வாலிபரிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை புது விளாங்குடி சத்குருநாத் நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் கூடல்புதூர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசியதாக கூறிய மர்ம நபர், பழங்காநத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கிரேடு-1 பணியிடம் காலியாக உள்ளது.

    இந்த பணியிடத்திற்காக உங்களது வேலை வாய்ப்பு பதிவைஅனுப்ப ரூ.12 ஆயிரம் தர வேண்டும் என கூறினார்.

    மேலும் அந்த பணத்தை அழகுராஜா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தும்படி தெரிவித்தார். அதன்படி நான் ரூ.12 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு பல தவணைகளில் மொத்தமாக ரூ.75 ஆயிரத்து 600 வாங்கி விட்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.

    இதனைத்தொடர்ந்து பழங்காநத்தம் சென்று விசாரித்த போது அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என தெரியவந்தது.

    மேலும் என்னிடம் போனில் பேசியவர் சரவணன் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணன், அழகுராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×