என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்29 Aug 2018 3:55 PM IST (Updated: 29 Aug 2018 3:55 PM IST)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செஞ்சி:
செஞ்சி அருகே மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த அதேஊரை சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான மாட்டு வண்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்து கம்பந்தூர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த பூபதி, அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சிவசக்திவேலிடம் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கேட்டார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி, கிராம நிர்வாக அலுவலர் சிவசக்திவேலை ஆபாசமாக திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பூபதி மீது செஞ்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×