search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திண்டுக்கல் பொறியாளரை மணந்த ஜெர்மனி ஆசிரியை
    X

    திண்டுக்கல் பொறியாளரை மணந்த ஜெர்மனி ஆசிரியை

    திண்டுக்கல் பொறியாளருக்கும் ஜெர்மனி ஆசிரியைக்கும் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன். இவரது மகன் நவீன் சேகரன். என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான தெரஸா ஹாபர்ள் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொள்வார்களா? என தயக்கம் இருந்தது. இருந்த போதும் நவீன் சேகரன் தனது காதலியின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார்.

    அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடனே இந்த திருமணம் நடக்க வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

    அதன்படி திண்டுக்கல் வந்த நவீன் சேகரன் தனது பெற்றோரிடம் ஜெர்மன் பெண்ணுடனான காதலை தெரிவித்தார். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாப்பிள்ளை காசி யாத்திரை செல்வது, பெண்ணுக்கு காலில் மெட்டி அணிவிப்பது, பெற்ற தாய் தந்தைக்கு கால்களை கழுவி பாத பூஜை செய்வது, சம்மந்திகள் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சடங்குகள் நடந்தது.

    அதன் பின் வேத மந்திரங்கள் முழங்க தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக ஜெர்மனியில் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்து முறைப்படி ஆண்கள் வேஷ்டி சட்டையுடனும், பெண்கள் பட்டுப்புடவையுடன் தலையில் பூ வைத்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×