search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கார் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை
    X

    வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கார் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை

    வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சுனில் (வயது 27), கார் டிரைவர். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி அருகே உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் நிதிநிறுவன அதிபர் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரியை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றார். உடனே அகிலாண்டேஸ்வரி சத்தம்போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சுனில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார். உடனே போலீசார் பலத்த பாதுகாப்புடன் சுனிலை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×