என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மாடல்காலனி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உளுந்தூர் பேட்டை பேரூராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.