என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்- திருமாவளவன் ஆவேசம்
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அண்மை காலமாக வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்கிற அகந்தை அவருடைய நடவடிக்கைகளில் மேலோங்கி நிற்கிறது.
பெரியாரை, அண்ணாவை, கலைஞரை என திராவிட இயக்க தலைவர்களையும் இடதுசாரி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளையும் மிக கடுமையாக மூர்க்கமாக விமர்சித்து வருகிறார். தற்போது திருமயம் அருகே காவல்துறையினரையும் உயர்நீதிமன்றத்தையும் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரீகமாக பேசி இருக்கிறார்.
சிறைத்துறைக்கும், காவல்துறைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் சிறையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை சொல்ல காவல் துறையினருக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்கிறார்.
மனோகரன் என்கிற இந்து பெயர் கொண்ட அதிகாரியை கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கைக்கூலி என்று பேசுகிறார்.
உயர்நீதிமன்றம் கூட்டம் போட தடை விதித்து இருக்கிறது என்று சொன்ன போதும் உயர்நீதி மன்றத்தை கொச்சையாக தடை விதிக்கப்பட்ட இடத்திலேயே கூட்டம் நடத்துவேன் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு முகம் சுழிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது.
மத்தியில் ஆட்சி நடத்துகிறோம் என்கிற மமதையும், தமிழக அரசு ஒரு கையாலாகாத அரசு என்கிற அலட்சியமும்தான் அவருடைய இந்த போக்கிற்கு காரணங்களாக உள்ளன.
அவர் உயர் ரத்த அழுத்த சிக்களுக்கு ஆளானவராகவோ அல்லது மனநல சிக்களுக்கு ஆளானாவர்களாகவோ இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் வருகிறது.
எனினும் அவர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
உடனடியாக அவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அரசு இனியும் மெத்தனம் காட்டினால் மதவாத சக்திகள் தமிழகத்தின் அமைதியை சீரர்குலைப்பார்கள் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எச்.ராஜா இழிவுப்படுத்தி பேசி வருகிறார். இப்போது உச்சக்கட்டமாக பித்தம் தலைக்கு ஏறி நீதிமன்றத்தையும் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படும் நீதிபதிகளை நம்பவில்லை என்றால் நீதிபதிக்கு மேல் பிரதமர் மோடி என்று அவர் நினைத்திருக்கிறார். இனியும் தாமதிக்காமல் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #hraja
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்