search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான அசோக்குமார்
    X
    கைதான அசோக்குமார்

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி- வாலிபர் கைது

    பாலக்கோடு அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கணம்பள்ளி தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் அசோக்குமார் (வயது33). இவர் பாலக்கோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அசோக் குமாரிடம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள என்ஜினீயர், டிப்ளமோ படித்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த சிவசங்கர், சிரஞ்சீவி, கார்த்திக்கேயன் ஆகியோர்கள் உள்பட பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விண்ணப்பித்து இருந்தனர். அவர்களிடம் அசோக்குமார் ஒருவருக்கு சுமார் ரூ.3 லட்சம் முதல் 9 லட்சம் வரை வசூல் செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

    அங்கு தகுந்த படிப்பிற்கு வேலை செய்து கொடுக்காமல் சம்பளம் குறைவாகவும், கொத்தடிமையாகவும் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் அங்கு 2 மாதங்கள் வேலை செய்து விட்டு திரும்பி சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

    இதனால் விரக்தியடைந்த அவர்கள் அசோக்குமாரிடம் சென்று தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப வேண்டும் என்று கூறினர். ஆனால் அவர்களை பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து சிரஞ்சீவி, சிவசங்கர், கார்த்திக்கேயன் ஆகியோர் பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வெளிநாட்டில் வேலை செய்தால் வீட்டில் உள்ள அனைத்து கடன்களையும் அடைத்து விடலாம் என்று எங்களது பெற்றோர்கள் பணம் கட்டி வெளிநாட்டுக்கு பாலக்கோடு அசோக்குமார் என்பவர் ஏஜென்சி மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர்கள் எங்களது பெற்றோர்களிடம் பணம் பெற்று கொண்டு வெளிநாட்டில் கொத்தடிமைகளாக எங்களை பயன்படுத்தி உள்ளனர்.

    ஆனால் அவர்களிடம் நாங்கள் என்ஜினீரிங் படித்துள்ளோம். அதற்கு தகுந்தாற்போல் வேலை கொடுக்காமல் இப்படி கொத்தடிமையாக எங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் என்று கூறினோம்.

    அதற்கு உங்களை அனுப்பிய ஏஜென்சி அசோக்குமாரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார். இதனால் கடந்த 3 மாதம் வேலை செய்து முடித்து அந்த பணத்தில் வெளி நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தோம்.

    மேலும் அசோக்குமார் கலெக்டர் பதவிக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் பெற்று உள்ளதாக தொழிலதிபரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று போலி ஏஜென்சி நடத்தி வரும் அசோக்குமார் போன்றவர்களை போலீசார் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். #tamilnews
    Next Story
    ×