search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேற முயன்ற பெண்கள் உள்பட 400 பேர் கைது
    X

    கோவையில் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேற முயன்ற பெண்கள் உள்பட 400 பேர் கைது

    கோவையில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம்களை திட்டமிட்டு அலைக்கழிப்பதை கண்டித்து என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேற முயன்ற பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கட்டில், பாய், தலையணை, குடம் உள்ளிட்ட பொருட்களுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திரண்டனர்.

    அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்திற்கு மாநில செயலாளர் முகம்மது பயாஸ் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் பாஷா, மாவட்ட தலைவர் அன்வர் உசேன், செயலாளர் அப்பாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் முகம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் கட்டில், பாய், தலையணையுடன் என்.ஐ.ஏ. அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ரேஸ்கோர்ஸ் நுழைவு வாயிலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    அப்போது போலீசாருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு உருவானது. பின்னர் ஊர்வலமாக சென்ற 100 பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டம் குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகம்மது பயாஸ் கூறும் போது, இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் முஸ்லிம்களை திட்டமிட்டு அலைக்கழிக்கிறார்கள். இதனால் வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கைவிட வேண்டும் என்றார்.
    Next Story
    ×