search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதி கடைசிநாள்
    X

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதி கடைசிநாள்

    2017-2018-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. #IncomeTax
    சென்னை:

    2017-2018-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த கால அவகாசம், வருகிற 15-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து வருமான வரித்துறை அறிவித்திருந்தது.

    இந்தநிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2-வது முறையாக மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 31-ந் தேதி வரை கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்றும், வருமான வரி கணக்கு தணிக்கை செய்பவர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது.

    இதேபோல தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது . #IncomeTax
    Next Story
    ×