search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
    X

    ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

    தமிழகத்தில் ரேசன் கடை ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று திரும்ப பெறப்பட்டது. #RationShop #RationEmployees
    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 15-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றது. 

    ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ரேசன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் ரே‌ஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.

    இந்நிலையில், போராட்டம் நடத்தும் ரேசன் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூடுதல் பதிவாளர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ரேசன் ஊழியர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #RationShop #RationEmployees
    Next Story
    ×