என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளைமேடு ரவுடி ஜெகன்நாதன் 323 நாட்கள் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்24 Oct 2018 5:05 PM IST (Updated: 24 Oct 2018 5:05 PM IST)
ஓராண்டுக்கு தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து அதனை மீறி செயல்பட்டதால் சூளைமேடு ரவுடி ஜெகன்நாதனை 323 நாட்கள் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (42). கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பரிந்துரையின் பேரில் ஓராண்டுக்கு தவறு செய்ய மாட்டேன் என்று திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினத்திடம் எழுதி கொடுத்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி இது தொடர்பான உத்தரவாதத்தை அவர் அளித்திருந்தார்.
இதன் பின்னர் ஜெகன்நாதன் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிக்கினார். அந்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓராண்டுக்கு தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தவர் அதனை மீறி செயல்பட்டதால் குற்ற நடைமுறை சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் செல்வநாகரத்தினம் முடிவு செய்தார்.
இதன்படி ஓராண்டில் ஜெகன்நாதன் ஒழுங்காக இருந்த காலத்தை கழித்து விட்டு மீதமுள்ள 323 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி புழல் சிறையில் ஜெகன்நாதன் அடைக்கப்பட்டார்.

Next Story
×