search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் மீட்பு பணி- தமிழக அரசுக்கு விஜயகாந்த் நன்றி
    X

    கஜா புயல் மீட்பு பணி- தமிழக அரசுக்கு விஜயகாந்த் நன்றி

    தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Vijayakanth #GajaCyclone #TNGovt
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும், பகலும் பாராமல் கண் விழித்து விரைவாக செயல்பட்ட அனைத்துதுறை அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து சிறப்பாக பணிகளை ஆற்றியதற்கு தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறோம்.

    மிக முக்கிய புயல் பாதிப்புக்கான இடமாக வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளது. அங்கு அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.

    உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரிசெய்வதற்கும், வீடுகள் சேதம் அடைந்ததை சரிசெய்வதற்கும், சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும், மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்வதற்கும் உதவிட வேண்டும்.

    தமிழக அரசு கஜா புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMDK #Vijayakanth #GajaCyclone #TamilnaduGovt
    Next Story
    ×