என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 7 மணிவரை முன்னிலை நிலவரம்
Byமாலை மலர்11 Dec 2018 7:14 PM IST (Updated: 11 Dec 2018 7:14 PM IST)
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று இரவு 7 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
சென்னை:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் 11 தொகுதியிலும், காங்கிரஸ் 9 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
44 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 63 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.
இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று 5 முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். #Results2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X