என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்
Byமாலை மலர்16 Dec 2018 2:07 PM GMT (Updated: 16 Dec 2018 2:07 PM GMT)
சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என தெரிவித்தார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
சென்னை:
சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், என் வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள். இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரிப்புடன் இருக்கிறேன். இந்த வேளையில் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?
நீங்கள் எங்கும் போகவில்லை. லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளீர்கள்.
வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி. தமிழகம் என்றால் அவ்வளவு அலட்சியமா? எனவே அவரை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் இணைந்திருக்கின்றன.
ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என குறிப்பிட்டார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
Next Story
×