என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியில் கமல் - ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவாரா?
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தீவிரமாகி உள்ளன.
தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
தமிழகத்திலும் தி.மு.க. தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பல கட்சிகள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வையும், மத்தியில் பா.ஜனதாவையும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வரும் கமல்ஹாசனும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கூட்டணி அமைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கும் கமல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது உறுதியாகி உள்ளது. அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் அது பா.ஜனதாவுக்கு எதிராக அமையும். காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவே அமையும்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள கமல் தேர்தல் களத்தில் குதிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
தனது சொந்த ஊரான பரமக்குடி அடங்கியுள்ள ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
சொந்த தொகுதியில் போடடியிட்டால் அது கூடுதல் பலமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடனும் கமல் கருத்துக்களை கேட்டு வருகிறார். அதே நேரத்தில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நேரத்தில் டெல்லி சென்றிருந்த கமல் அங்கு சோனியா- ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதுபற்றி அவர் கூறும் போது, காங்கிரஸ் தலைவர்களுடன் அரசியல் நிலவரம் பற்றி பேசினேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.
நேற்றைய பேட்டியில் கூட கூட்டணி தொடர்பாக காங்கிரசுடன் பேச்சு நடப்பதாகவே கமல் கூறியுள்ளார். இதனால் காங்கிரசுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் போது கமலுக்கும் சேர்த்தே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #KamalHaasan #Congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்