search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 8-ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
    X

    சென்னையில் 8-ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    சென்னையில் வருகிற 8-ந்தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கூட்டணி அமைப்பது குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வியூகம் அமைத்து வருகிறார்கள்.

    இதற்காக தேசிய, மாநில கட்சி தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

    கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.

    தேர்தலை எதிர்கொள்ள அடுத்த கட்ட நடவடிக்கையாக பூத் கமிட்டி தோறும் நிர்வாகிகளை நியமிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே 40 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கட்சி நிர்வாகிகளை முகவர்களாக நியமித்து இருந்தாலும் அதை மீண்டும் சரி பார்க்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பூத் வாரியாக நியமித்துள்ள முகவர்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக, அந்த பெயர் பட்டியலை தலைமை கழகத்துக்கு கொண்டு வரும்படியும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



    இதற்கிடையே வருகிற 8-ந்தேதி மாலையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள முகவர்களை இறுதி செய்தும் மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளனர். #ADMK
    Next Story
    ×