search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா அரசுக்கு இப்போது விவசாயிகள் மீது அக்கறை ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
    X

    பா.ஜனதா அரசுக்கு இப்போது விவசாயிகள் மீது அக்கறை ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

    நான்கு வருடமாக விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத பா.ஜனதா அரசு தற்போது மட்டும் அக்கறையாக செயல்படுவது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #AnbumaniRamadoss
    சென்னை:

    தண்டையார்பேட்டை கணக்கர் தெருவில் பா.ம.க கட்சியின் வடக்கு மாநில அலுவலகம் திறப்புவிழா நடந்தது.

    விழாவுக்கு மாநில துணை பொதுசெயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மா.வெங்கடேச பெருமாள், வண்ணை ரா.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலகத்தை பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. திறந்து வைத்தார். கட்சி தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஆறு மாதத்திற்கு முன்பாகவே தயார் நிலையில் இருக்கிறோம். களபணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வோம். மக்கள் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சியை தமிழக அரசு திட்டமிட்டு எதிர்கொள்ள வேண்டும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. 40 விழுக்காடு மழை மட்டுமே பெய்து இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மிகக் கடுமையான வறட்சி ஏற்படும். அதற்கு இப்போது இருந்து திட்டமிட்டு அண்டை மாநிலங்களிலிருந்து நீரை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் மத்திய மாநில அரசுகளின் உறவு சுமூகமாக இருக்க வேண்டும். சுமூகமாக இருந்தால்தான் மாநிலம் முன்னேற்றம் அடையும். ஆனால் சிபிஐ வைத்தும் மற்ற அமைப்புக்களை வைத்தும் மிரட்டுவது நியாயமற்றது. நியாயமான முறையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். சட்டத்திற்கு உள்ளடங்கிய செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.



    தமிழக விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இரண்டு பருவத்திற்கும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது தேர்தல் அறிக்கையாக தயாரித்து உள்ளோம். அதன் படி ஆண்டிற்கு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    ஆனால் தற்போது 6000 ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள். இது போதுமானதாக இல்லை.விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில் இது போதுமானதாக இல்லை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நான்கு வருடமாக விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத பா.ஜனதா அரசு தற்போது மட்டும் அக்கறையாக செயல்படுவது ஏன்? 4 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த விலையில் இருந்தாலும் பெட்ரோல், டீசல் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு தான் விற்பனை செய்தார்கள் எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் பயன் அடைந்தார்கள்.

    தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்தபிறகு அதுபற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அன்புமணி கூறினார். #BJP #AnbumaniRamadoss
    Next Story
    ×