என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் சர்வதேச அணுசக்தி கண்காட்சி ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது
Byமாலை மலர்23 Feb 2019 2:23 AM IST (Updated: 23 Feb 2019 2:23 AM IST)
சர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் வருகிற ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. #Exhibition
சென்னை:
சர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் வருகிற ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.
நவீன அணுசக்தி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பொறுப்பான முறையில் கையாள்வது, பசுமை திட்டங்களுக்கான முதலீடுகள், கார்பன் இல்லாத எரிசக்தி உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற உள்ளன.
அணுசக்தி தொழில்நுட்ப பயன்பாடு, கதிரியக்க தொழில்நுட்ப அறிவியல், மருந்து மற்றும் வேளாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பம் அறிமுகம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
நவீன அணுசக்தி அறிவியல் துறையின் நிபுணர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தேசிய மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களையும், சிறப்பான செயல்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
அணுசக்தித்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், சர்வதேச வல்லுனர்களுக்கும் விருதுகள் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் இந்த விருது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல் ரஷியாவின் ‘ரோசாட்டம்’ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Exhibition

Next Story
×